Thursday, October 9, 2014

நீலக்கடலோரம்...


எட்டி குதிச்ச அலையில ,
ஒரு கைப்பிடி தண்ணி மட்டும் ,
திரும்பி போகாம
பாறை இடுக்குல சிக்கிகிச்சே ...

கைப்பிடி தண்ணி
வெய்யக் காஞ்சு , காணாம போக
காத்து கெடக்க ...
பாசி பாத்து , பேறு தெரியாத செல சீவனும் வளந்து,
அதுவும் ஒரு ஒலகமா மாறிப்போச்சே ...

அங்கயும் ஒரு மீனு வேட்டை யாட
ஒரு மீனு பயந்து ஓடுமோ ...
வேட்டை யாட போன தாய் திரும்பி வர
ஒரு குஞ்சு காத்திருக்குமோ ...
நாலு மீனு , எட்டாகி கெடக்க
காதலும் நடக்குதோ ...

கண்ட கோளத்துக்கு பதில் தெரியாம
என் மூளை நிக்க ,
ஒன்னும் புரியாத ஊமை மனசு
பொல பொலன்னு கண்ணீர் உதுக்க ,
நீலக்கடலோரம் நிக்கிறேன்டி

பாரையோரம்  உருவான ஒலகம் போல
நானும் பொத்தி பொத்தி சேத்து வாரேன்
செல மணி துளிய...

சேத்து வைச்சதுல இருந்து
பார்த்து பார்த்து ஏடுத்து வெச்சுருக்கேன் ...
கொழந்தையா சிரிச்ச சிரிப்பையும் ..
விரக்தியா விழுந்த ஒத்த துளி நீரையும்..
ஏப்போவாவது கடவுள பார்த்த
கொடுக்கலாம்னு ....

- ஷர்வன்

No comments:

Post a Comment