Thursday, October 9, 2014

முத்தம்


உயிருடன் சதை திண்ணும்
வழக்கமில்லை என்றேன் 

முயற்சித்து பார் என்றாள்

ஏங்கிருந்து தொடங்கவென்றேன்

கோட்டைக்கு நுழைவாயில் 
ஆற்றுக்கு மடவாய் என மொழிந்தாள்.

மருண்டதோ, மயங்கியதோ 
உலகம் இருண்டது மெய்யென்பேன் 

மெல்லக்  கண்திறந்து 
உண்டது, நீயா? நானா? 
தொடுத்தேன் 

எனக்கு பசி குறையவில்லை எனவெதிர்த்தாள்
மூடிய இமை ,அவ்வண்ணமே 

உனக்கும் பசியாறவில்லை எனில் 
உண்டது யார் தான் ?

மயங்கிய விழி திறவாமல் 
கொஞ்சம் பிரிந்த ஈரிதழில்
கீழிதலில் மட்டும் 
கொல் புன்னகை  விஷம் பரவவிட்டாள்

- ஷர்வன்

No comments:

Post a Comment