காந்திபுரத்திற்கும் , சரவணம்பட்டிகும்
இடையே நெளிந்த பயணத்தில் ,
உன்னிடம் கேட்க
என்னிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தது ...
காற்றில் அலையும் மேலாடையை
பிடித்துப் பிடித்து
தலையில் இட்டு
கன்னத்தின் வழியாய்
பாதி இதழ் மறைப்பதேனடி ?
அப்படியென்ன !!!
கண் கொள்ளா வெட்கமுமாய்
உதடு கொள்ளா புன்னகையுமாய்
முகம் கொள்ளா இளஞ்சிவப்புமாய்
காற்றோடு அலாவல்?
அந்தச் சிவப்பைக் கொஞ்சம்
குடுவைக்குள் அடைத்துத் தர முடியமா ?
பற்கள் தெரியாமல் நீளமாய்
உன்னால் மட்டும் எப்படி புன்னகைக்க முடிகிறது ?
உன் பெயர் என்ன ?
ஒரு யுகமாய் உன் வண்டியைத் துரத்தும்
நான் உன் ரசிகன் ஆகிவிட்டது
உனக்குத் தெரியமா ?
வண்டியை ஓட்டுவது
உன் அண்ணன் தானே ?
-சரவணம்பட்டி பிரிவில் நான்
No comments:
Post a Comment