Wednesday, October 29, 2014

கவிதை

இயல்புக்கு விளக்கம் ஏனடி ?
என் தமிழுக்கு கன்னி உன்மேல் காதலடி ..

நாம் புணர்வதை ..
அதில் உணர்வதை ..
உலகம் கவிதையென கொண்டாடுதடி ...

- ஷர்வன் 

விழைவு

மகிழ்ச்சி  ஒரு மது
அறிவு ஒரு  கேடு
வாழ்கை ஒரு சாபம்
மரணம் ஒரு வரம்
மதுவிலே மயங்கும் போதே ஒரு வரம் கொடு ..
கேடு தேடும் சபமிடதே .. என் இறைவா ..

- ஷர்வன் 

Thursday, October 9, 2014

விரைவாய் காதலி


காந்திபுரத்திற்கும் , சரவணம்பட்டிகும்
இடையே நெளிந்த பயணத்தில் ,
உன்னிடம் கேட்க
என்னிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தது ...

காற்றில் அலையும் மேலாடையை
பிடித்துப் பிடித்து
தலையில் இட்டு
கன்னத்தின் வழியாய்
பாதி இதழ் மறைப்பதேனடி ?

அப்படியென்ன !!!
கண் கொள்ளா வெட்கமுமாய்
உதடு கொள்ளா புன்னகையுமாய்
முகம் கொள்ளா இளஞ்சிவப்புமாய்
காற்றோடு அலாவல்?

அந்தச் சிவப்பைக் கொஞ்சம்
குடுவைக்குள் அடைத்துத் தர முடியமா ?

பற்கள் தெரியாமல் நீளமாய்
உன்னால் மட்டும் எப்படி புன்னகைக்க முடிகிறது ?

உன் பெயர் என்ன ?

ஒரு யுகமாய் உன் வண்டியைத் துரத்தும்
நான் உன் ரசிகன் ஆகிவிட்டது
உனக்குத் தெரியமா ?

வண்டியை ஓட்டுவது
உன் அண்ணன் தானே ?

-சரவணம்பட்டி பிரிவில் நான்

ஆசை

சூரியன் உதித்தும் விடியாத காலையில் ,
உறக்கம் கலைந்தும் விழி திறக்கா மயக்கத்தில் ,
உன் தேநீருக்காக கண் மூடிக்கிடந்த நேரத்தில் ,

என் உயிர் பிரிந்திருக்கலாம் ...

- ஷர்வன்

காதல் காளி

புரிதல் தாண்டி உணர்தல் அறிகிறேனடி ,
உணர்தல் ஊர்ந்து , உயிர் புரியுதடி ..
காலமில்லா வெளியில் என் உயிர் ஓடும்
பாதை தெரியுதடி ...
உன் காலடியில் அசுரன் தலை தூக்கி பார்ப்பது
வலியல்லவென புரிந்து கொண்டேன் ..
வரம் வேண்டாம் என் தேவி
வதம் செய்துவிடு என்னை ...

-ஷர்வன்

பேதைப் பெண்ணே

நிலைக்கண்ணாடி முன்
உன் அழகை நீ ரசிப்பதை
நான் ரசித்திருந்தேன்...


மெள்ளத் திரும்பி
பொட்டு அழகா இருக்கா ? என்கிறாய்
என் அசட்டுச் சரிப்பில்
என்ன பதில் கிடைத்ததோ
நீயும் புன்னகைத்துவிட்டு நகர்கிறாய்.....


பேரண்டத்தை வாய் பிளந்து
ரசிக்கும் சிறுவன் நானடி...
ஒரு நட்ஷத்திரம் குறைந்திருக்கா என்று
எண்ணப்போவதும் இல்லை ...
குறைந்திருந்தாலும்
உன் அழகின் முழுமை குறையப்போவதும் இல்லை...


--ஷர்வன்

முத்தம்


வஞ்சம்தானடி ..
நீ என் கண்ணோடு கண் சேர்த்தபோது ,
எனக்கேற்பட்ட மூச்சுத்திணரலுக்கு.

-ஷர்வன்